atlee

Advertisment

'ராஜாராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகை விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர், அடுத்ததாக நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b67f164b-037c-4d47-b88d-6fee5259449d" height="364" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_3.png" width="564" />

தற்போது 'பதான்' படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஷாருக்கான் அப்படத்தை முடித்துவிட்டு அட்லீ படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஷாருக்கான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அட்லீ படம் குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ஷாருக்கான், அட்லீ குறித்த கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வியெழுப்பியதால் 'அட்லீ' ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது.